எங்கள் புகைப்பட பயணம்


நேரடியாக விஷயத்தை சொல்லுகிறேன் நாங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று ஆனால் நாங்கள் அனுபவித்த அனுபவம் வேறொன்று.

எங்கள் பயணம் -


நானும் நண்பர் தினேஷ் அவர்களும் இணைந்து சினிமா பயணத்தை துவங்கினோம் அதன் முதன் படியாக நாங்கள் இருவரும் ஒரு புகைப்பட தொழில் துவங்கினோம் நன்றாக இயங்கி வருகிறது அதேசமயம் சில பொழுதுபோக்கு நாட்களும் வருவது உண்டு அப்படி ஒரு நாளை வீண் ஆக்க வேண்டாம் என்று நாங்கள் இருவரும் ஒரு புகைப்பட பயணத்திற்கு செல்லலாமா என்று முடிவு செய்தோம் சென்று என்ன வகை புகைப்படம் எடுக்கலாம் என்று பேசிகொண்டோம் பெரிதாக ஏதும் தோணவில்லை எனவே கண்ணில் மாட்டும் அனைத்தையும் புகை படம் எடுக்கலாம் என்று களத்தில் இறங்கினோம் கமேரகளை எடுத்துக்கொண்டு இருவரும் மும்பையின் மத்திய நகரத்திற்கு சென்றோம் ஒரு ரயில் பயணம் கிடைத்தது நாங்கள் ஒரு நொடி கூட வெளி உலகத்தை பற்றி பேசவில்லை முழுக்க முழுக்க புகைப்படம் மற்றும் சினிமாவை பற்றிய  பேச்சுதான் மிக அருமையாக இருந்தது.


இறுதியாக நாங்கள் இருவரும் புகைப்படம் எடுக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம் அங்கு சென்று எடுத்த முதல் புகைப்படம் இது.

இங்கு இருந்து துவங்குகிறது எங்கள் பயணம்.

நாங்கள் எதிர்பாராத விஷயம் என்ன நடந்தது என்றால் இந்த புகைப்படத்தை பாருங்கள். 

நான் புகைப்படம் எடுக்கிறேன் என்று தெரிந்ததும் அவர் தனது கால் அசைப்பதை நிறுத்தி புகைப்படம் எடுபதர்க்கு தயார்படுத்திக் கொண்டார் சரி இவர் தயாராக இருக்கிறார் என்று நான் இவரிடம் அனுமதி கேட்க சென்றேன், "ஐயா நான் உங்களை புகைப்படம் எடுக்குறன் ஒரு போஸ் கொடுங்க" என்றதும் அவர் கூடவே கூடாது என்று முகம் சுழித்தார் நாங்கள் என்ன மன நிலையாக இருக்கும் என்று குழம்பி போனோம்.

இங்கு முடிவு செய்தோம் இனி அனுமதிலாம் கேட்டு கொண்டு இருந்தால் நமது நேரம் தான் வீண் ஆகும் என்று நாங்கள் எங்களால் முடிந்த புகைப்படங்களை எடுத்தோம் பிறகு எங்களை நாங்களே எடுத்தும் கொண்டோம் மிக சந்தோஷமாக சென்றது எங்கள் நாட்கள்.








இதற்க்கு பிறகுதான் அதிர்ச்சியும் நகைச்சுவையும் எங்களை தாக்கியது.


இந்த புகைப்படத்தை பாருங்கள் இவர்கள் சுற்றுலா பயணிகளை புகைப்படம்  எடுப்பவர்கள் வெறும் 30 ரூபாய்க்கு ஒரு புகைப்படம் உடனடியாக பிரின்ட் செய்து தரப்படும் மற்றும் மொபைல் இல் ஏற்றி தரப்படும் நாங்கள் இருவரும் யோசித்து கொண்டு இருக்கிறோம் எப்படி இவர்கள் அன்றாட வாழ்க்கையை ஒட்டிவிட முடியும் என்று, ஏன் என்றால் இவர்கள் போன்று 300 போட்டோ காரர்கள் இந்த இடத்தில் இருக்கிறார்கள்  இதை நண்பர் தினேஷ் மிக சூழ்ச்சமமாக ஒருவரிடம் கேட்டு தெரிந்தார். அது எப்படி என்றல் இவ்வாறு தான் புகைப்படம் பாருங்கள். 



இந்த புகைப்படத்தில் தொப்பி போட்டு இருக்கும் அந்த நபர் ஒரு போட்டோ காரர் பக்கத்தில் இருக்கும் அந்த இரண்டு நபர் போட்டோ காரர் இடம் 20 புகைப்படம் எடுத்து கொண்டு அதில் 4 புகைப்படம் மட்டும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள் அதை தருவதாகவும் ஒப்பு கொண்டார் ஆனால் ஒரு போட்டோ வீதம் 20 என வேண்டும் என்று கேட்டு போட்டோ காரறிடம் வாக்கு வாதம் நடத்தி கொண்டு இருந்தார்கள். 

பிறகு போட்டோ காரர் புகைப்படம் தர முடியாது என்று அங்கு இருந்து கிளம்பி விட்டார். அப்பொழுது நமது தினேஷ் நண்பர் போட்டோ காரர் இடம் பேச்சு கொடுத்தார் அந்த போட்டோ காரர் இருந்த கோவத்தில் அவர் இந்த தொழிலை பற்றிய அணைத்து தகவல்களையும் உளறிவிட்டார்.

அது என்னவென்றால் இந்த இந்திய கேட் சுற்றுலா தலத்தில் காணப்படும் அணைத்து போட்டோ காரர்களும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தானாம் இவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்களாம் இதை கேட்டதும் அதிர்ந்தோம் மற்றும் வெள்ளை நிற சட்டை இவர்களது நிறுவன உடுப்பாம் நானும் தினேஷும் சிறிது நேரம் இதை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருந்தோம்.

அவ்வாறு சிந்தித்து கொண்டே நாங்கள் முன்னே நகர்ந்தோம் அப்பொழுது ஒரு நகைச்சுவை நாங்கள் இருவருமே 40,000 மற்றும் 60,000 மதிப்புள்ள கேமரா வைத்து இருக்கிறோம் இதை பொதுவாக DSLR என்று கூறுவார்கள் இந்த புகைப்படம் எடுக்கும் நபர் ஒருவர் எங்களிடம் வந்து ஒரு போட்டோ எடுத்துகோங்க என்ந்து DSLR கேமரா உங்க கேமரா வ விட சூப்பர் ஆ போட்டோ வரும் எடுங்க என்று எங்களிடமே வியாபாரம் செய்ய பார்த்தார் 
எங்களுக்கே விபுதியா 

 உடனே தினேஷ் ஆமா எங்க கிட்ட   இருக்குறது பழைய கேமரா உன்து பெரிய   கேமரா தான் என்று சொன்னதும்   இருவருமே வாய் விட்டு   சிரித்துகொண்டோம் நாள் மிக   அருமையாக நகர்ந்தது. 
  நாங்கள் எடுத்த சில புகைப்படம் உங்கள் பார்வைக்கு. இவ்வளவு தூரம் இதை   நீங்கள் படித்து இருகிறீர்கள் என்றல்   என்னுடையை உச்சக்கட்ட அன்பு   உங்களுக்காக மிக்க நன்றி என்றும்   அன்புடன் ராஜூ ஸ்ரீனிவாசன் மற்றும்   தினேஷ்ராஜ். 












































Follow Us on Insta - Raju Srinivasan - Dineshraj 

For Booking us  - rstudiophoto.wordpress.com  



Comments